சென்னை, படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘ஏழு கடல் ஏழு மலை’ ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் ராம். இவர், ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடல் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த ஆண்டில் மாஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது. மேலும், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ரொமேனியாவில் நடைபெற்ற ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடத் தேர்வானது. தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்ட திரைப்படங்களை கொண்டாடும் ‘நோ லிமிட்’ பிரிவில் இப்படம் இடம்பெற்றது. அக்டோபர் 1-ல் வெளியாகிறது நிவின் பாலி, சூரி இணைந்து நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. வெளியானது டிரெய்லர் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-trailer-for-the-film-ezhu-kadal-ezhu-malai-starring-soori-and-nivin-pauly-has-been-released




