லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தியா: ரோகித் சர்மா, கில் (கேபட்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், குர்னூர் ப்ரார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா. இங்கிலாந்து: ஜேக்கப் பெத்தேல், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன், ஜோஷ் டங், அடில் ரஷித் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/first-odi-england-elects-to-bat-against-india




