நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன். இவர் கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது முதல்-அமைச்சர் விஜய்-க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறகவும் பேசினார். மார்க்கண்டேயன் கைது இதையடுத்து, திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 21ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சிறையில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை சிறையில் உதயநிதி ஸ்டாலின் இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். பாளையங்கோட்டை சிறைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயனை சந்தித்து ஆறுதல் கூறினார். உதயநிதி ஸ்டாலினுடன் திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் பாளை சிறைக்கு சென்று திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சந்தித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-in-palayankottai-prison-met-by-udhayanidhi-stalin




