சென்னை, திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு நாள் எண்ணில்லா போராட்டங்களாலும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களாலும், நம் அன்னைத் தமிழ் நிலத்தின் பெயரை மீட்டளித்திட்ட நாள் இது. நம் கழகம் பெற்ற அதிகாரத்தால், நம் தாய்நிலம் தலைநிமிர்ந்து, தெற்கிலிருந்து தொடங்கும் இத்துணைக் கண்டத்தின் வரலாற்றை முழங்கும் இனமானச் சொல்லாக நிலைப்பெற்றுவிட்டது, நம் தமிழ்நாடு! பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநில உரிமைகளைக் காத்திட உறுதிகொள்வோம். “தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-loudly-proclaim-our-unique-identity-of-tamil-nadu-kanimozhi




