மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் வைசாலி. சாஹில் என்பவர் வைசாலியை காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் வைசாலி வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது குறித்த தகவல் சாஹிலுக்கு தெரிய வந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக வைசாலியை சந்திக்க சாஹில் சென்றார். நாசிக் இந்திரா நகர் கார்டனில் வைசாலி இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு சாஹில் சென்றார். சாஹில் அங்கு வருவதை பார்த்தவுடன் வைசாலி தனது வருங்கால கணவனுக்கு போன் செய்து, `சாஹில் வந்துவிட்டான், சீக்கிரம் வாருங்கள்' என்று கூறினார். உடனே வைசாலியின் வருங்கால கணவன் அலுவலகத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு வேகமாக வந்தார். வைசாலி தனது போன் இணைப்பை துண்டிக்கவில்லை. வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் நடந்தது. இதனை வைசாலியின் வருங்கால கணவன் தனது போனில் கேட்டுக்கொண்டே வேகமாக வந்து கொண்டிருந்தார். 30 நிமிடமாக நடந்த இந்த வாக்குவாதத்தில் சாஹில் தன்னிடம் இருந்த கத்தியால் வைசாலியை குத்தினார். சரமாறியாக குத்திக்கொலை செய்த பிறகு வைசாலியிடம் இருந்த போனை பிடுங்கி அவரது வருங்கால கணவனிடம் `வைசாலியை முடித்துவிட்டேன்' என்று சாஹில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். கத்திக்குத்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி சாஹில் உடல் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியபடி இருந்தது. அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வைசாலி வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தது குறித்து சாஹிலுக்கு யார் தகவல் கொடுத்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்; காதலி தற்கொலை மற்றொரு சம்பவம்: ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது சாப்ட்வேர் எஞ்சினியர் கீர்த்தி, தனது காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கேள்விப்பட்டு மனவேதனையால், மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். கீர்த்தி, பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பொந்துரு கிராமத்தைச் சேர்ந்த சாய் சுமந்த் என்பவருடன் எட்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். சாயின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததையடுத்து, அப்பெண் மிகுந்த மனவேதனைக்குள்ளாகி இம்முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிய வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/her-story-has-ended-young-man-commits-suicide-after-informing-his-future-husband-about-murdering-his-girlfriend




