சென்னை, சென்னை பெரியமேடு நெடுஞ்சாலையில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு சென்னை நேரு பூங்கா அருகே பெரியமேடு நெடுஞ்சாலையில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டு முன்பு, நேற்று இரவு 8 மணி அளவில் மர்ம நபர்கள் திடீரென்று 3 பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசினார்கள். இதில் 3 குண்டுகளும் வெடித்து தீப்பற்றி எரிந்தன. சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த பெண் அலறியடித்து ஓடிவந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியமேடு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-womans-house-in-chennai




