முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/kollywood/ananda-vikatan-cinema-awards-winners-full-list-2025
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
https://cinema.vikatan.com/kollywood/ananda-vikatan-cinema-awards-winners-full-list-2025

இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாக்யராஜின் இறுதிச் சடங்கிற்கான வேலைகள் அனைத்தையும், அவருடைய சீடரான பார்த்திபன் முன் நின்று கவனித்துக் கொண்டார். பாக்யராஜிடம்தான், பார்த்திபன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அன்று முதல் அத்தனை நெருக்கமான பாக்யராஜுடன் பயணித்து வந்த பார்த்திபனை, இச்சம்பவம் பெரிதும் பாதித்தது. பாக்யராஜ் மறைவு குறித்தும், அவருடனான நினைவுகள் குறித்தும் நம் சினிமா விகடன் சேனலுக்கு அளித்த பேட்டியில் பார்த்திபன் பகிர்ந்துகொண்டார். Bhagyaraj அவர் பேசுகையில், "எங்கள் இயக்குநர் கே.பாக்யராஜ் சார் கொடுத்த நம்பிக்கைதான் என் தந்தை நிம்மதியாகக் கண்மூடக் காரணமாக இருந்தது. பொதுவாக, மரண தருவாயில் இருக்கும் எந்தவொரு தந்தைக்கும் 'நமக்குப்பின் நம் மகன் என்ன ஆவான்?' என்ற கவலை இருக்கவே செய்யும். ஆனால், அதையெல்லாம் தாண்டி, 'என்றாவது ஒரு நாள் என் மகன் ஒரு நல்ல நிலைக்கு வருவான்' என்ற மிகப்பெரிய நம்பிக்கையை என் தந்தைக்குள் விதைத்தவர் பாக்யராஜ் சார். நான் அவரிடம் உதவியாளராகச் சேர்வதற்கு முன்பு டப்பிங் பேசுவது, தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பது எனப் பல வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். அப்போது என் மீது என்னுடைய தந்தைக்குக் கவலை இருந்தது. என் தந்தை உடலநலம் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில்தான் நான் பாக்யராஜ் சாரிடம் போய் சேர்ந்தேன். அவரிடம் சேர்ந்தாலும் 'தாவணிக் கனவுகள்' திரைப்படத்தில் நான் 11-வது உதவி இயக்குநராகத்தான் சேர்ந்தேன். நான் சீக்கிரமாக ஹீரோவாகவோ, இயக்குநராகவோ ஆகிவிட வேண்டும் என்கிற சூழ்நிலையில்தான் அப்படத்தில் 'போஸ்ட்மேன்' கதாபாத்திரம் ஒன்றில் பாக்யராஜ் சார் என்னை நடிக்க வைத்தார். என் தந்தையின் புற்றுநோய் பாதிப்பு குறித்தோ, நான் அனுபவித்து வந்த குடும்பக் கஷ்டங்கள் குறித்தோ அவரிடம் நான் எதையும் விளக்கவில்லை. அப்போது எனக்குக் கிடைத்த சம்பளம் வெறும் ரூ.300 மட்டும்தான். அதில் ரூ.270 தந்தையின் மாத்திரைகளுக்கே செலவாகிவிடும். மீதமுள்ள ரூ.30-ஐ வைத்துக்கொண்டு நானும், என் அம்மா, அப்பா, தம்பி என நான்கு பேரும் முப்பது நாட்களும் சாப்பிட வேண்டும். Parthiban About Bhagyaraj முன்னேற வேண்டும் என்ற மனநிலையுடன் இரவும் பகலும் அழுதுகொண்டே உழைப்பேன். 'பார்த்திபன் இப்படி உடைந்து அழுது யாரும் பார்த்ததில்லை' என்று இப்போது பலரும் சொல்கிறார்கள். யாரும் பார்க்கவில்லை என்பதைத் தவிர, நான் பல நாட்கள் தனிமையில் உடைந்து அழுதிருக்கிறேன். நான் மிகவும் சென்சிட்டிவ்வான ஒருவன்தான். என் நிலைமையைப் பற்றிப் புரிந்துகொண்ட பாக்யராஜ் சார், எனக்கு அந்தப் போஸ்ட்மேன் வாய்ப்பை அளித்தார். என் தந்தையும் அதனைப் பார்த்தார். நிறைய பத்திரிகைகளில் என்னைப் பாராட்டி விமர்சனங்கள் வந்தன. அதைப் பார்த்து என் தந்தை அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. மரண தருவாயில் இருந்த அவருக்கு அந்த நிம்மதியைத் தந்த என் இயக்குநருக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தவித்தேன். ஒருநாள் என் தந்தையை அவரிடம் அழைத்துச் சென்று நன்றி கூறினோம். என் தந்தை மிகவும் கம்பீரமானவர், எளிதில் கண் கலங்காதவர். ஆனால் அன்று கலங்கினார். 'என் மகனை உங்களிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன்' என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. அதன் பிறகு சில நாட்களில் என் தந்தையும் காலமாகிவிட்டார். தந்தை இறந்த மூன்றாம் நாளே நான் இயக்குநரின் அலுவலகத்திற்குச் சென்று கீழே நின்றேன். மாடியிலிருந்து என்னைப் பார்த்த இயக்குநர், 'அவனை வீட்டுக்குப்போகச் சொல்லுங்கள்' என்றார். Parthiban About Bhagyaraj தந்தை இறந்ததற்காக 13 நாட்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்கிற சடங்குகளை விட, என் இயக்குநரின் அருகில் இருப்பதுதான் எனக்கு முக்கியமாகத் தெரிந்தது. ஆனால், என்னைப் பார்த்தால் அவரும் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார் என்பதால், 'ஒரு வாரம் கழித்து வரச்சொல்லுங்கள்' என என்னைத் தவிர்த்தார். நானோ மறுநாளும் பிடிவாதமாகப் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றேன். அலுவலகத்தில் எங்களுக்கிடையே எப்போதாவது முரண்பாடுகள் வரும்போது, நான் அவருக்குக் கடிதம் எழுதுவேன். ஒருமுறை அவர், 'இனி எனக்குக் கடிதம் எழுதாதே, அதைப் படிக்கும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது' என்றார். அந்த அளவிற்கு உருக்கமாக எழுதுவேன். அதற்குப் பிறகு நான் எழுதிய ஒரு கடிதத்தில், 'இது கடிதமல்ல, என் உயில்' என்று குறிப்பிட்டிருந்தேன். அதன்பின், அவருடைய சொந்தப் படத்தை நான் இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், அவருக்குக் கீழ் இருந்தவர்கள் பட்ஜெட் காரணத்தைச் சொல்லிச் சில நெருக்கடிகளை உண்டாக்கினார்கள். பொருளாதார ரீதியாக அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் நான் என் இயக்குநரிடம் விவரித்த பிரம்மாண்டமான கதையை அப்படிச் சுருக்க எனக்கு உடன்பாடில்லை. பிறகு அந்தப் படத்திலிருந்து நான் வெளியேறினேன். அவரை விட்டுப் பிரிந்திருந்த அந்தச் சமயத்தில், என் தாயின் மூக்குத்தியை விற்று, 'தினத்தந்தி' நாளிதழில் ஒரு விளம்பரம் கொடுத்தேன். அதைப் பார்த்து நெகிழ்ந்துபோன இயக்குநர், என்னை அழைத்து வரச் சொன்னார். நான் அவரிடம் செல்லும்போது, 'அவருடைய தயாரிப்பில் நான் மீண்டும் படம் இயக்க மாட்டேன்' என்ற ஒரே ஒரு நிபந்தனையுடன் தான் சென்றேன். Parthiban About Bhagyaraj அவர் என்னைப் பார்த்து, 'முன்பு நடந்ததை மறந்துவிடு, நீ படம் இயக்க வேண்டாம், எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வா' என்றார். பாக்யராஜ் சார் அவருடைய பேரனிடம் ரொம்பவே பாசமாக இருப்பார். பேரனும் தாத்தாவும் காரில் வாக்கிங் செல்வார்கள். பாக்யராஜ் சார் மறைந்த பிறகு, அந்தச் சிறுவனிடம் தாத்தா சாமியிடம் சென்றுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அந்தச் சிறுவன் பூஜை ரூமிற்குச் சென்று தேடிப் பார்த்திருக்கிறான். பாக்யராஜ் சாருக்காக நான் இறுதிச் சடங்கு நிகழ்வில் முன்நின்றது குறித்துப் பலரும் தவறான கமெண்ட்களைப் பதிவிட்டார்கள். 'அனைத்தையும் நீதான் முன்னின்று செய்ய வேண்டும் என நினைக்கிறாய். நீ இறந்துபோனால் யாரும் வந்து பார்க்கமாட்டார்கள்' என்றெல்லாம் சொன்னார்கள். அவையெல்லாம் என்னை மிகவும் காயப்படுத்தின." என்றார் வேதனையுடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

ஆடை அணிவதில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் பாலிவுட் நடிகையும், டிவி பிரபலமுமான உர்ஃபி ஜாவேத், எதைச் செய்தாலும் சர்ச்சைக்குறிய வகையில் செய்வது வழக்கம். அவர் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அவரது பெயரை ரிதா பரத்வாஜ் என்று மாற்றிக்கொண்டதாகவும் செய்தி பரவியது. இச்செய்தி பரவிய நிலையில் அவர் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். கோயிலுக்கு வரும் போது வழக்கமான உடைகளை தவிர்த்து பாரம்பரிய உடையில் அணிந்து வந்திருந்தார். பின்னர் இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கைகளைக் குவித்தபடியும், நெற்றியில் குங்குமம் வைத்த படி தொடர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் காமாக்யா தேவி கோயிலுக்கு சென்றேன் என்று பகிர்ந்துள்ளார். அதோடு இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக வெளியாகி இருக்கும் செய்திக்கும் விளக்கம் அளித்துள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ``இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக வெளியாகும் கூற்றுக்களில் எந்த உண்மையும் இல்லை. ஏனது பெயரையோ, மதத்தையோ மாற்றிக் கொள்ளவில்லை. எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை. எனது அடையாளத்தில் எந்த வித மாற்றமும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். சரியாக உண்மைச் சரிபார்ப்பு இல்லாமல் இதுபோன்ற கூற்றுக்கள் ஏன் பரப்பப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு, உர்ஃபி ஜாவேத் பாபுல்நாத் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவர் கோயிலின் செங்குத்தான படிக்கட்டுகளில் முழங்காலில் ஏறிச்சென்று தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

ஒடிசா மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பாடப் புத்தகத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-இல் வெளியான 'ஹம் தில் தே சுகே சனம்' திரைப்படத்தின் பிரபலமான 'நிம்புடா நிம்புடா' பாடல் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 5-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராயின் பாடல் ராஜஸ்தான் மாநில நாட்டுப்புறப் பாடலான இது, திரைப்படப் பாடலாகப் புத்தகத்தில் அப்படியே அச்சிடப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் கடும் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளதுடன், கல்வியாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தகத்தைத் தொகுக்கும்போது ஏற்பட்ட கவனக்குறைவால் இந்தத் தவறு நடந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஒடிசா மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (SCERT) பாடப்புத்தகங்களில் மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, 8-ஆம் வகுப்புப் புத்தகங்களில் மட்டும் அதிகபட்சமாக 705 பிழைகள் உள்ளன. SCERT இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பாடப்புத்தகங்கள் அனைத்தும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவை விரைவில் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று ஒடிசா மாநில பள்ளி மற்றும் மக்கள் கல்வித்துறை அமைச்சர் நித்யானந்த கோண்ட் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தவறு குறித்து முழுமையாக விசாரிக்க விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

முதல்வர் விஜய் தலைமையில் தவெக நடத்திய தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மதிமுக-வின் முதன்மைச் செயலாளரும் எம்.பியுமான துரை வைகோவிடம் பேசினோம். ``தவெகவின் ஆதரவு கட்சிகளின் முதல் கூட்டம் இது. இதை ஆலோசனை கூட்டமென எடுத்துக் கொள்ளலாமா? இல்லை ஒரு புதிய கூட்டணி உருவாகிவிட்டதா?" ``நிச்சயமாக புதிய கூட்டணி உருவாகிவிட்டது. அதை வெளிக்காட்டும் கூட்டம்தான் இது. தவெக-வை முழுமையாக ஏற்றுக் கொண்டதால் மட்டும்தானே அவர்களின் அழைப்பை ஏற்று இங்கே கூடியிருக்கிறோம்." ``திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்தீர்கள். முடிவுகளுக்கு பிறகு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவுடன் மதிமுக முகாமில் உற்சாகம் அதிகமாக இருக்கிறதே?" ``கண்டிப்பாக, குறிப்பாக நான் ரொம்ப ரொம்ப உற்சாகமாக இருக்கிறேன். `அரசியல் ஒரு நச்சு. இங்கே நேர்மைக்கு இடம் இருக்காது' எனும் கருத்தை கொண்டிந்தவன் நான். எங்கள் கட்சியின் நிர்வாகிகளின் நிர்பந்தத்தால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டேன். அரசியல் மொத்தமும் ஊழலால் புரையோடியிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த இருபெரும் கட்சிகளின் மீது மக்களுக்கு பெரிய சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனில், நீங்கள் ஏன் திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்தீர்கள் என கேள்வி கேட்பீர்கள். பணமயப்பட்ட அரசியல் சூழல் எங்களை போன்ற சிறிய இயக்கங்களுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்கிறது. பெரிய கட்சிகள் ஒரு எம்.எல்.ஏ தொகுதிக்கு 15 கோடியும் எம்.பி தொகுதிக்கு 40 கோடியும் செலவு செய்கின்றனர். இதற்கு மத்தியில் ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்றுதான் ஐயா மூப்பனார், வைகோ போன்றவர்கள் மூன்றாவது அணி கட்டினார்கள். ஆனால், அந்த அணிகளால் மக்களின் நம்பிக்கையை முழுமையாக பெற முடியவில்லை. ஆனால், விஜய் இன்றைக்கு அதை சாதித்து காட்டியிருக்கிறார். விதிகளுக்கு புறம்பாக ஒரு பைசா கூட செலவளிக்காமல் தவெக வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக சொன்னதைப் போலவே மிக நேர்மையான ஒரு ஆட்சியை விஜய் நடத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை போன்றவற்றில் கமிஷன் கலாசாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. லஞ்ச லாவண்யம் இல்லாத நிலையை கண்டு மக்களே மனம் மகிழ்ந்து போயிருக்கின்றனர். நாங்களும் அதனால்தான் உற்சாகமாக இருக்கிறோம்." ``தேர்தலுக்கு முன்பாக அறிவாலயம் வாசலில் நின்று 'உயிருள்ள வரை தளபதிக்கு துணையாக நிற்பேன்!' என முழங்கிய வைகோ, இப்போது சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டார் என்கிற விமர்சனம் எழுகிறதே?" ``அது திமுகவினரின் பொய் கருத்துருவாக்கம். அவர்களால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஒரு தொகுதிக்கு 20 கோடி என பல்லாயிரம் கோடிகளை களத்தில் இறக்கினார்கள். 25 கட்சிகளோடு கூட்டணி வைத்தார்கள். ஆனாலும் மக்கள் அவர்களை நிராகரித்துவிட்டார்கள். அந்த வேதனையில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் எங்களை போன்றவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்." ``நீங்களும்தானே அந்தக் கூட்டணியில் இருந்தீர்கள்?" ``எங்களை போன்ற சிறு இயக்கங்களுக்கு வேறு வாய்ப்பு என்ன இருந்ததென சொல்லுங்கள். இப்போதுதான் நாங்கள் விரும்பிய மாற்றம் நடந்திருக்கிறது. அதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐ.யூ.எம்.எல், மதிமுக என அத்தனை பேரும் ஆதரவு தெரிவித்திருக்கிறோம். மக்களுக்கு நன்மை விளைவிக்கும் மாற்றத்தை ஆதரிப்பதில் என்ன பிரச்னை?" ``ஆட்சியமைந்து 40 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாக ரொம்பவே அதீதமாக தவெக ஆட்சியை மதிப்பிடுவதை போல இருக்கிறதே?" ``மக்கள் ஊழலால் வெறுத்து போயிருந்தனர். இந்த 40 நாட்களில் நிலைமை மாறியிருக்கிறதா இல்லையா? நீங்களே வெளியே போய் தனியார் பள்ளி உரிமையாளர்களை கேளுங்கள். பத்திரப்பதிவு அலுவலங்களுக்கு செல்பவர்களை கேளுங்கள். உங்களுக்கே உண்மை புரியும். இது நல்ல மாற்றம். இது நீடிக்குமா நீடிக்காதா என்பதை பற்றியெல்லாம் இப்போதே பேச வேண்டிய தேவை இல்லை. இந்த மாற்றம் அப்படியே தொடரும் என்றே நம்புகிறேன்." ``நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?" ``ஊழலற்ற மக்கள் விரும்பும் நல்லாட்சியை கொடுக்கிறீர்கள் என முதல்வரை அத்தனை கட்சியினரும் ஒருமித்தமாக பாராட்டினோம். இதே நிலை தொடர வேண்டும் என்றோம். அவரும் கடைசி வரை மதச்சார்பற்ற சமூகநீதி என்கிற விஷயத்தில் உறுதியாக நிற்பேன் நம்பிக்கையோடு கூறினார். நல்ல புரிதல்மிக்க கூட்டமாக நடந்து முடிந்திருக்கிறது." VBGRAMG திட்டத்துக்கு ஒப்புதல்: `வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? தருகிற நிதியையும்...' - துரை வைகோ ``மதச்சார்பின்மை, சமூகநீதி எல்லாம் சரிதான். ஆனால், மாநில சுயாட்சி, மாநில உரிமை விவகாரத்தில் தவெக அரசு சறுக்க தொடங்கியிருக்கிறதே. பல மாநிலங்கள் எதிர்க்கும் VBG - RAM - G திட்டத்தை அமல்படுத்திவிட்டார்களே?" ``வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. நானே அந்த மசோதாவை எதிர்த்து பேசியிருக்கிறேன். மாநிலங்கள் இந்த திட்டத்துக்காக 40% நிதியை கொடுக்க வேண்டும் என்பதை ஏற்கவே முடியாது. ஆனால், அதற்காக முரண்டு பிடித்து கொண்டு நின்றால் அவர்கள் தருகிற நிதியையும் தரமாட்டார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பியிருப்பவர்களின் நிலை என்னவாகும்? அதையெல்லாம் மனதில் வைத்துதான் அந்த திட்டத்தை தவெக அரசு அமல்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் மட்டுமில்லை மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டமாக இருந்தாலும் கூட்டணியாக ஒன்றாக நின்று எதிர்ப்போம்." View this post on Instagram View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
உலகம் முழுவதிலுமிருந்து சமீபத்திய செய்திக் கட்டுரைகளைப் படியுங்கள்