தூத்துக்குடி, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் 'நாளைய பிரதமர் விஜய் தான்' என்று சட்டசபையில் அமைச்சர் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:- இதற்கு காங்கிரஸ் இயக்கத்தில் இருக்கக்கூடிய நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நாங்கள் கருத்து தெரிவிப்பது முக்கியமல்ல. காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்தபோதே, காங்கிரஸ் கட்சியே இதுபற்றி அறிவிக்காத காலகட்டத்தில், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று முதன்முதலில் அறிவித்தார். தற்போது கூட்டணியில் இருந்துகொண்டு இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகும்போது, அதுகுறித்து காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள்தான் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-first-to-announce-rahul-gandhi-as-pm-says-kanimozhi




