மெல்போர்ன், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டார்வின் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது. ஆஸ்திரேலியா 198 ரன்களுக்கு ஆல் அவுட் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 71 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய வங்காளதேச வீரர் ஹசன் முகமது அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்காளதேசம் 426 ரன்களுக்கு ஆல் அவுட் இதனை தொடர்ந்து களமிறங்கிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 426 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹசன் தமீம் அதிகபட்சமாக 101 ரன்கள் குவித்தார். இதன் மூலம் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 228 முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா 161/4 இதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் வங்காளதேசத்தை விட 67 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் கிரீன் 43 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 19 ரன்னிலும் களத்தில் உள்ளனர். வங்காளதேச வீரர் ஹசன் முகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆட்டத்தில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் 6 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள ஆஸ்திரேலியா இப்போட்டியில் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/test-against-bangladesh-australia-struggle




