சென்னை, தமிழகத்தில் திமுக - பாஜக கூட்டணி உருவாகிறதா? என்ற கேள்வி பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தபிறகு தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரும் தவெகவில் இணைந்தனர். மேலும் திமுகவும் பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இணையும் என்று தவெக தரப்பில் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது. தமிழகத்துக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் நாங்கள் அதை கண்டிப்பாக ஆமோதிப்போம், வரவேற்போம்" என்று திமுக எம்.பி. கனிமொழி சோமு கூறியிருந்தார். தொடர்ந்து இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், 'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை' என்றார். மேலும், "திமுக - பாஜக கூட்டணி உருவாகும்போது சொல்வார்கள். உருவாகும் முன்பே நீங்களே கூட்டணியை உருவாக்கிவிடுவீர்கள்போல" என்று தெரிவித்துவிட்டு சென்றார்/ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-bjp-alliance-vanathi-srinivasans-response




