இந்தியாவிலுள்ள மிக முக்கிய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி பாம்பே (IIT BOMBAY),ஐ.ஐ.டி டெல்லி(IIT DELHI),ஐ.ஐ.டி கௌஹாத்தி(IIT GUWAHATI ),ஐ.ஐ.டி ஹைதராபாத்(IIT HYDERABAD),ஐ.ஐ.டி இந்தூர் (IIT INDORE),ஐ.ஐ.டி ரூர்க்கி (IIT ROORKEE) மற்றும் ஐ.ஐ. ஐ. டி.எம் ஜபல்பூர்(IIITM JABALPUR) ஆகிய கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் பேச்சு ஆப் டிசைன்ஸ்(BACHELOR OF DESIGNS) (B.Des) என்னும் பட்டப் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வின் பெயர் UCEED ஆகும். இதனை “அண்டர் கிராஜுவேட் காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஃபார் டிசைன்” (UNDER GRADUATE COMMON ENTRANCE EXAMINATION FOR DESIGN) இந்தியன் ஸ்கூல் ஆஃப் டிசைன் (INDIAN SCHOOL OF DESIGN) மும்பையிலுள்ள ஐ.ஐ.டி பாம்பே நடத்தும் இந்தியன் ஸ்கூல் ஆப் டிசைன், முன்பு "இண்டஸ்ட்ரியல் டிசைன் சென்டர் "(INDUSTRIAL DESIGN CENTRE என அழைக்கப்பட்டது. தற்போது, இந்தியன் ஸ்கூல் ஆப் டிசைன் என்னும் பெயரில் இயங்குகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் இங்கு பேச்சுலர் ஆஃப் டிசைன் (BACHELOR OF DESIGNS) என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பு நான்கு வருட படிப்பாகும். அதாவது மொத்தம் எட்டு செமஸ்டர்கள் கொண்ட படிப்பாக நடத்தப்படுகிறது. மேலும் இங்கு ரெட்டை படிப்பான (DUAL COURSE) B.Des மற்றும் M.Des ஆகிய இரண்டு படிப்புகளும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. இது 5 வருட படிப்பாகும்.அதாவது, மொத்தம் 10 செமஸ்டர்கள் கொண்ட படிப்பாக இது அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் இந்த படிப்பில் சேரலாம். ஆனால், “அண்டர் கிராஜுவேட் காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஃபார் டிசைன்” (UNDER GRADUATE COMMON ENTRANCE EXAMINATION FOR DESIGN) என்னும் நுழைவு தேர்வை எழுதி கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.மேலும்,, பிளஸ் -2 கல்வித் தகுதி அடிப்படையில் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ரெட்டை படிப்பு திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பு இங்கு உள்ளது.இதன்மூலம்,தகுதி வாய்ந்த திறமையான மாணவ மாணவிகள் எளிதில் தங்களது திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. சிறப்பு அம்சங்கள் வடிவமைப்புத் துறையில் வல்லுநராக மாறுவதற்கு உதவும் வகையில் பல்வேறு உயர் தர பாடத்திட்டங்கள் இந்த படிப்பில் உள்ளன.உலக அளவில் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை படிக்கும் போதே புரிந்து கொள்ளும் அளவுக்கு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. வடிவமைப்பு, ஆராய்ச்சி, கல்வி சார் செயல்பாடுகள் போன்ற பலவித பயிற்சிகள் வழங்கப்படுவதால், வடிவமைப்புத் துறையில் பன்முகத்தன்மையுடன் இங்கு படிப்பவர்கள் திகழ்கிறார்கள்.இந்த அமைப்பில்-இண்டஸ்ட்ரியல் டிசைன் கம்யூனிகேஷன் டிசைன் அனிமேஷன் டிசைன் மற்றும் மொபிலிட்டி & வெகிக்கிள் டிசைன் ஆகிய துறைகளில் எம்.டி. இஎஸ் (M.Des) படிப்பும் வழங்கப்படுகிறது. டாக்டர்(Ph.D) பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டு பட்டம் பெறுவதற்கும் வசதிகள் இங்கு உள்ளது. மேலும் விவரங்களுக்கு. என்ற இணையதளத்தைப் பார்வையிடவும் ஐ.ஐ.டி டெல்லி-(IIT DELHI) வடிவமைப்பு துறை (DEPARTMENT OF DESIGN) "இந்திய தொழில்நுட்ப கழகம் "என அழைக்கப்படும் டெல்லியிலுள்ள ஐ.ஐ.டி -டெல்லி வடிவமைப்புத் துறை, இந்தியாவில் உள்ள வடிவமைப்புத் துறையின் அறிவு மற்றும் நடைமுறை ஆகியவற்றில் புத்தாக்க சிந்தனைகளை புகுத்தி சிறப்பாக செயல்படும் அமைப்பு ஆகும்.இந்தத் துறையின் மூலம் தற்போது B.Des, B.Tech in Design. M.Des மற்றும் Ph.D ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. B.Des என்னும் படிப்பு நான்கு ஆண்டுகள் படிப்பாகும். அதாவது, இந்த மொத்தம் எட்டு செமஸ்டர் கொண்ட படிப்பாக இந்த படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.வடிவமைப்பு சம்பந்தப்பட்ட பாடங்களோடு புத்தாக்க சிந்தனைகள் படைப்பாற்றலை வளர்க்கும் பயிற்சிகள் ஸ்டுடியோ சார்ந்த கற்றல் கூட்டு முயற்சிகளோடு இணைந்து செயல்படும் சிறப்பு பயிற்சிகள் ஆகியவை இங்கு வழங்கப்படுகின்றன. இதனால் சொந்தமாக தொழில் தொடங்கவும் பல்வேறு வாய்ப்புகளை இந்த படிப்பு வழங்குகிறது. B.Tech in Design என்னும் படிப்பு சிக்கலான பிரச்சனைகளுக்கு கம்ப்யூட்டர் உதவியோடு பகுப்பாய்வு செய்து தீர்வு காணவும், படைப்பாற்றலுடன் கூடிய புத்தாக்க சிந்தனையை உருவாக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தப் படிப்பு நான்கு ஆண்டுகள் படிப்பாகும். அதாவது மொத்தம் எட்டு செமஸ்டர்கள் கொண்ட படிப்பாக இந்த படிப்பு திகழ்கிறது.இந்தப் படிப்பில் மாணவர் சேர்க்கை JEE ADVANCED தேர்வின் தரவரிசை அடிப்படையில் நடைபெறும். இருந்த போதும், அதே ஆண்டு நடைபெறும் UCEED தேர்விலும் வெற்றி பெற்று மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.M.Des என்னும் படிப்பு இரண்டு ஆண்டுகள் நடத்தப்படும் முழு நேர படிப்பாகும். இந்த படிப்பில் அடிப்படையான கோட்பாடுகள் ஸ்டுடயோ பயிற்சிகள்மம்பட்ட வடிவமைப்புகள் ஆகியவற்றை கற்றுத் தருகிறார்கள். திறமை வாய்ந்த வல்லுனர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்க இந்த படிப்பு அடித்தளமாக அமைகிறது. தகவல் தொடர்பு, பொருட்கள் தயாரிப்பு, வடிவமைப்பு போன்றவற்றில் புத்தாக்க சிந்தனையை உருவாக்கவும், உலக அளவில் அமைப்பில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும் போதிய பயிற்சிகள் இங்கே வழங்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு என்னும் இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஐ.ஐ.டி கௌஹாத்தி வடிவமைப்பு துறை (IIT GUWAHATI) DEPARTMENT OF DESIGN இந்தியாவில் சிறந்த வடிவமைப்பு தொழில்நுட்ப பயிற்சியை கௌஹாத்தியிலுள்ள ஐஐடியின் வடிவமைப்பு துறை வழங்குகிறது. இங்கு, B.Des, M.Des-Design,M.Des -EPD மற்றும் Ph.D ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆக்கபூர்வமான முறையில் வடிவமைப்பை கையாளும் பயிற்சிகளை பொறியியல் வடிவமைப்புசமூக அறிவியல் ஆகிய துறைகளை இணைத்து வழங்கும் சிறப்பு பயிற்சிகள் இங்கு நடத்தப்படுகிறது.ஆராய்ச்சி, புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப ஆய்வுகள் ஆகியவற்றை வழங்குவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த நிறுவனம், தனி நபர்கள், குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்குகின்றன.மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி. ஐ.ஐ.டி ஹைதராபாத் வடிவமைப்பு துறை (IIT HYDERABAD, DEPARTMENT OF DESIGN) 2014 ஆம் ஆண்டு இந்த வடிவமைப்பு துறை ஹைதராபாத்தில் உள்ள ஐஐடி நிறுவனத்தில் தொடங்கப்பட்டது. அப்போது, M.Des மற்றும் Ph.D ஆகிய இரண்டு படிப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது.ஆனால், 2019 ஆம் ஆண்டு, B.Des என்னும் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது. வடிவமைப்பு தொழில்நுட்பம் பொதுமக்களுக்கு ஆக்கபூர்வமான வகையில் உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த துறை உருவாக்கப்பட்டது.இந்தத் துறையில் பங்கேற்பு மற்றும் கூட்டு வடிவமைப்பு (PARTICIPATORY AND COLLABORATIVE DESIGN), அறநெறிகள் (ETHICS), நல்வாழ்வு (WELLNESS )மற்றும் மக்கள் பங்களிப்பு இணைந்த வடிவமைப்பு (CROWD- SOURCE DESIGN) ஆகியவற்றின் மூலம் பல்வேறு புதுமைகள் நிகழ்த்தப்படுகின்றன.மேலும் விவரங்களுக்கு என்னும் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். ஐ.ஐ.டி இந்தூர்- ஸ்கூல் ஆஃப் இன்னோவேஷன் (IIT-INDORE-SCHOOL OF INNOVATION) இந்தியாவில் உள்ள ஐஐடி களில் முதன் முதலில் தொடங்கப்பட்டுள்ள துறை ஸ்கூல் ஆஃப் இன்னோவேஷன் (SCHOOL OF INNOVATION)ஆகும்.வடிவமைப்புத் துறையில் புதுமைகளை புகுத்தவும், அதன் மூலம் சிறந்த மதிப்பை அந்தத் துறைக்கு உருவாக்கவும் முன்னுரிமை அளித்து இந்தத் துறை உருவாக்கப்பட்டது.சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முழுமையான நல்ல தீர்வுகளை வழங்குவதற்கும் அடிப்படை பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகிறது.ஒரு தயாரிப்புக்கான முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை (ECO-SYSTEM )உருவாக்கி அதனை இந்திய அளவில் செயல்படுத்துவதற்கு உரிய பயிற்சிகளை வழங்குவதே இந்த துறையின் முக்கிய நோக்கமாகும்.பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் வல்லுனர்களின் முழுமையான திறமையை பயன்படுத்தும் வகையில் ஒரு கூட்டு ஆராய்ச்சி சூழலாக இந்த துறை விளங்குகிறது. இந்தத் துறையில்,நகர்புற அமைப்புசார் புதுமை (URBAN SYSTEM INNOVATION), கல்வி தொழில் நுட்பங்கள்,(EDUCATIONAL TECHNOLOGIES),சுகாதார அமைப்புகள் (HEALTH CARE SYSTEMS ) மற்றும் நிலையான ஆற்றல் அமைப்புகள் (SUSTAINABLE ENERGY SYSTEM), டிஜிட்டல் ஊடகப் புத்தாக்கம் (DEGITAL MEDIA INNOVATION) ஆகிய புதுமைகளை புகுத்துவதற்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இங்கு 2025 ஆம் ஆண்டு முதல் B.Des என்னும் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நான்கு வருட படிப்பாகும். மேலும் 2027 ஆம் ஆண்டு முதல் M.Des மற்றும் Ph.D ஆகிய இரண்டு படிப்புகளும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வடிவமைப்புத் துறையில் நடைமுறை அனுபவத்தை பெறச் செய்யும் குறுகிய கால பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.பயிற்சிகள் முடிந்ததும் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி ஐ.ஐ.டி ரூர்க்கி-வடிவமைப்பு துறை (IIT ROORKEE -DEPARTMENT OF DESIGN) இந்திய நாட்டிற்கு தேவையான தொழில்நுட்ப மனித வளம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதில் சிறந்து விளங்குவது ஐஐடி ரூர்க்கி ஆகும்.உலக அளவில் சிறப்பு பெற்ற இந்த கல்வி நிறுவனம், அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கட்டிடக்கலை ஆகிய துறைகளில் ஏராளமான ஆராய்ச்சிகளை உருவாக்கி முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.தொழில்துறை வடிவமைப்பு (INDUSTRIAL DESIGN) சார்ந்த கல்வி மற்றும் புத்தாக்க வடிவமைப்புகள் முன்மாதிரிகள் உருவாக்குதல் (PROTYPING) ஆகியவற்றை சிறந்த பயிற்சிகள் மூலம் இங்கு கற்றுத் தரப்படுகிறது.இங்கு, B.Des, M.Des மற்றும் Ph.D ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. நிலையான தயாரிப்புகளை உருவாக்கும் வல்லமை கொண்ட வல்லுனர்களை உருவாக்கும் விதத்தில் சிறப்பு பயிற்சிகள் இங்கு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி: பி.டி.பி.எம் –ஐ.ஐ.டி.டி.எம்- ஜபல்பூர்- வடிவமைப்பு துறை (PDPM IITDM,JABALPUR -DESIGN OF DISCIPLINE) PDPM IITDM என்பது PANDIT DWARKA PRASAD MISRA INDIAN INSTITUTE OF INFORMATION TECNOLOGY, DESIGN OF MANUFACTURING என்பதைக் குறிக்கும். இந்த நிறுவனம் மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள வடிவமைப்பு துறை '"DESIGN OF DISCIPLINE" என்னும் பெயரில் இயங்குகிறது. இந்தத் துறை, பொருள்கள், அமைப்புகள் அல்லது தவுகவல் தொடர்புகளுக்கு வடிவம், செயல்பாடு மற்றும் சிக்கல்களுக்கு தீர்வுகள் காண்பதில் கவனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.இங்கு, B.Des, M.Des மற்றும் Ph.D ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி கல்வித்தகுதி UCEED நுழைவுத் தேர்வில் பங்கேற்க முதன் மறையாக பிளஸ் 2அல்லது அதற்கு இணையான தேர்வை எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.பிளஸ் 2 தேர்வில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும் இந்த நுழைவு தேர்வு எழுதலாம். வயது வரம்பு UCEED நுழைவுத் தேர்வை பொது பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் 2002 அக்டோபர் 1 நாள் அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் 1997 அக்டோபர் 1 நாள் அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும். எத்தனை முறை தேர்வு எழுதலாம்? UCEED நுழைவுத் தேர்வை பொதுவாக அதிகபட்சமாக இரண்டு முறை எழுதலாம். அதுவும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் எழுத வேண்டும்.இந்த நுழைவுத் தேர்வில் பெறம் மதிப்பெண்கள் ஓராண்டுக்கு மட்டுமே செல்லத்தக்கதாக அமையும். அதுவும் அதே கல்வியாண்டில் நடைபெறும் மாணவர் சேர்க்கைகளுக்கு மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நுழைவுத் தேர்வு நடைபெறும் இடங்கள் நுழைவு தேர்வு இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது.குறிப்பாக, அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர்/மொஹாலி, சென்னை, கோயம்புத்தூர், டேராடூன், டெல்லி,எர்ணாகுளம், குவஹாத்தி, ஹூப்ளி (ஹூப்ளி), ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, கோழிக்கோடு, லக்னோ, மும்பை, நாக்பூர், நொய்டா, பனாஜி, பாட்னா, புனே, ராய்ப்பூர், திருவனந்தபுரம், திருச்சூர், விசாகப்பட்டினம். ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். நுழைவுத் தேர்வு அறிவிப்பு UCEED நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும். தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும். அதாவது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டால் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த தேர்வு நடத்தப்படும்தேர்வு முடிவுகள் பொதுவாக மார்ச் மாதம் வெளியிடப்படும். நுழைவு தேர்வுக்கான பாடத்திட்டங்கள் PART-A VISUALIZATION AND SPATIAL REASONING: ABILITY TO VISUALISE AND TRANSFORM 2D SHAPES AND 3D OBJECTS AND THEIR SPATIAL RELATIONSHIPS. PRACTICAL AND SCIENTIFIC KNOWLEDGE: KNOW-HOW OF SCIENTIFIC PRINCIPLES AND EVERYDAY OBJECTS. OBSERVATION AND DESIGN SENSITIVITY: THE CAPACITY TO DETECT CONCEALED PROPERTIES IN DAILY LIFE AND THINK CRITICALLY ABOUT THEM. ATTENTION TO DETAIL, CLASSIFICATION, ANALYSIS, INFERENCE AND PREDICTION. ENVIRONMENT AND SOCIETY: GENERAL AWARENESS OF ENVIRONMENTAL, SOCIAL AND CULTURAL CONNECTIONS WITH DESIGN. ANALYTICAL AND LOGICAL REASONING: ABILITY TO ANALYSE QUALITATIVE AND QUANTITATIVE INFORMATION. LANGUAGE: PROFICIENCY IN READING AND COMPREHENDING STANDARD ENGLISH. CREATIVITY: GRASP OF VERBAL AND NON-VERBAL ANALOGIES, METAPHORS, SIGNS AND SYMBOLS. PART-B DRAWING: ABILITY TO DRAW PRODUCTS, PEOPLE OR SCENES IN PROPORTION WITH GOOD LINE QUALITY, COMPOSITION, PROPORTION, PERSPECTIVE AND SHADING. DESIGN APTITUDE: CAPABILITY TO PRACTICALLY AND APPROPRIATELY RESPOND TO PROBLEMS/SITUATIONS WITH INGENUITY AND EMPATHY. தொடர்பு கொள்ள. இந்த தேர்வு பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி CHAIRPERSON, UCEED-CEED OFFICE, IIT BOMBAY, POWAI, MUMBAI – 400 076 WEBSITE: EMAIL: uceed@iitb.ac.in PHONE: +91-22-2576 4063/9093/9094 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/education-and-employment/do-you-know-about-the-uceed-entrance-exam-courses-available-and-full-details




