மும்பை, “ஒருவரை கொச்சைப்படுத்திப் பேசுவதில் அப்படி என்ன ஆனந்தம் கிடைக்கிறது? ஒருவரது மனம் இதனால் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? இதையும் கடந்து செல்கிறேன். அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார். ‘நாகினி’ பிரபலம் நடிகை மவுனி ராய் இந்தி தொலைக்காட்சி தொடரான ‘நாகினி’ மூலம் பிரபலமானவர் நடிகை மவுனி ராய். இதில் அழகான நாக மோகினியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், பின்னர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் குத்துப்பாடல்களுக்கும் நடனமாடி ரசிகர்களிடம் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கிய மவுனி ராய் மவுனி ராய் குறித்து அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, கணவரை விவாகரத்து செய்யப் போவதாகவும், பாலிவுட் இளம் நடிகர் ஒருவருடன் காதல் உறவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், நடிகை திஷா பதானியுடனான அவரது நட்பு குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதையும் கடந்து செல்கிறேன். அவ்வளவுதான் இந்த நிலையில், தன்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து மவுனி ராய் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இனி என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற அளவுக்கு என்னை விமர்சித்து விட்டார்கள். மிகவும் கொச்சைப்படுத்தியும் பேசியிருக்கிறார்கள். ஒருவரை கொச்சைப்படுத்திப் பேசுவதில் அப்படி என்ன ஆனந்தம் கிடைக்கிறது? ஒருவரது மனம் இதனால் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? இதையும் கடந்து செல்கிறேன். அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன்னைச் சுற்றி வரும் விமர்சனங்கள் குறித்து மவுனி ராய் வெளிப்படையாக வேதனை தெரிவித்திருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/do-you-derive-such-pleasure-from-criticizing-me-actress-mouni-roy-expresses-anguish




