சென்னை, போக்சோ வழக்கில் சிறுமி ஒருவரின் புகைப்படம் மற்றும் காணொளி பகிரப்படுவது சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்கு இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- போக்சோ வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ️ ️ சென்னை பெருநகர காவல்துறை, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குற்றம் ⚠️ சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப பகிர்வது ஒரு குற்றமாகும். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பெருநகர சென்னை காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-ban-on-sharing-the-minor-girls-photograph-chennai-police




