தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் வட்டாட்சியர் அலுவலக ஓட்டுநர் வீட்டில் 16 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலக ஓட்டுநர் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அம்பாள்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், தற்போது விளாத்திகுளம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுசீலா(38), கடந்த திங்கள்கிழமை காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். கதவு பூட்டை உடைத்து 16 சவரன் நகைகள் திருட்டு பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பிய போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு இந்த சம்பவம் குறித்து சுசீலா அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/16-sovereigns-of-jewellery-stolen-from-taluka-office-drivers-house-police-netting-suspects



