இன்று செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "நான் கோவிலுக்கு செல்வேன். இதையெல்லாம் மதவாதம் என்று சொல்லிவிடமுடியாது, இன்னொரு மதத்திற்கு எதிரானது கிடையாது. நயினார் நாகேந்திரன் பேசுவது தான் மதவாதம். வன்மமாய் பார்க்கிற பார்வை நயினார் நாகேந்திரனுக்கு இருக்கிறது. இந்த வன்மம் தான் தமிழ்நாட்டில் அவரை மதவாதியாக காட்டுகிறது. கடவுளை நம்புவது எந்த ஒரு பிரச்னையும் கிடையாது, ஆனால் இன்னொருவர் நம்பிக்கையை, மதத்தை குறித்து பிரச்னை செய்யக் கூடாது" என்று பேசியிருந்தார். மாணிக்கம் தாகூர்`வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை தந்த தமிழக மக்களே நன்றி!'- முதல்வர் விஜய் அறிக்கை நயினார் நாகேந்திரன் அறிக்கை தன் மீதான இந்த விமர்சனத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "மலிவான அரசியல் ஆதாயத்திற்காகவும், ஊடக வெளிச்சத்திற்காகவும் என் மீது 'மதவாதி' என்ற முத்திரையைக் குத்த நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்தவ மதத்தின் புனிதத் தலங்களாகப் போற்றப்படும் பெத்லகேம் (Bethlehem), ஜெருசலேம் (Jerusalem) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய புனித பூமிக்கு நான் நேரில் சென்று வந்தவன். அதேபோலவே, இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவுக்கு மாற்று மதத்தினர் செல்ல அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நேரில் சென்று பார்த்து வந்தவன் நான். எல்லா மதங்களின் மீதும் எனக்குள்ள உளப்பூர்வமான மதிப்பும் மரியாதையும் தான் வாழ்நாளில் அந்தப் புனிதத் தலங்களைத் தரிசிக்க வேண்டும் என்ற என் எண்ணத்திற்குக் காரணம். நான் தம்பி திரு. மாணிக்கம் தாகூர் அவர்களைக் கேட்கிறேன், மதச்சார்பற்ற வேடமிட்டுத் திரியும் நீங்கள், உங்கள் வாழ்நாளில் இதுபோன்ற பிற மதப் புனிதத் தலங்களுக்குச் சென்று உண்மையான நல்லிணக்கத்தை உணர்ந்தது உண்டா? 'மதச்சார்பற்ற அரசு' என்று வாய்கிழியப் பேசும் நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சியினரும், உண்மையில் ஒரு குறிப்பிட்ட மதத்தைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறீர்கள். நயினார் நாகேந்திரன் அறிக்கைநயினார் நாகேந்திரன் அறிக்கை'புதின் முயற்சி, தென்னாப்பிரிக்கா என்ட்ரி, மன்மோகன் சிங் யோசனை' - 'BRICS' கதையைப் பகிர்ந்த காங்கிரஸ் அதற்கு சமீப காலமாகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களே சான்றாகும். நான் கோவிலுக்குச் செல்வது எப்படி மதவாதமாகாதோ, அதேபோல்தான் எனது மத நம்பிக்கைகளைப் போற்றுவதும், தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாத்துப் பேசுவதும் ஆகும். என் பேச்சில் ஒருபோதும் வன்மம் இருந்ததில்லை; தமிழகத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்கும் உணர்வு மட்டுமே எப்போதும் உண்டு. ஆனால், உண்மையான மதவாதம் என்பது உங்கள் காங்கிரஸ் கட்சியின் இரத்தத்திலேயே ஊறிப்போன 'ஓட்டு வங்கி' அரசியல்தான்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/nainar-nagendran-hits-back-at-manickam-tagore-over-religious-row




