சென்னை, தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது. தியாகராய நகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் வெப்பம் சற்று தணிந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/weather/widespread-rain-across-various-parts-of-chennai




