புதுடெல்லி, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசுக்கு பதில் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1945-ல் உயிரிழந்ததாக தகவல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது அஸ்தி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு இந்நிலையில், ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜியின் அஸ்தியை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, அவரது மகள் அனிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின்போது, அனிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். மத்திய அரசுக்கு நோட்டீஸ் இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/daughter-petitions-for-bringing-netajis-ashes-to-india-supreme-court-issues-notice-to-central-government




