வீரப்பன் குறித்த ஆவணத் தொடரான ‘கூச முனுசாமி வீரப்பன்’ சீசன்-2 டீசர் வெளியாகியுள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணத் தொடர் கடந்த 2023 ஆண்டு வெளியானது. வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மற்றும் அவரது குழுவின் மேற்பார்வையில் இத்தொடர் உருவாகியுள்ளது. ஆர். வி. பிரபாவதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம் 2023, டிசம்பர்14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி பரபலான கவனத்தைப் பெற்றதுடன் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. காரணம், இதுவரை வெளியாகாத வீரப்பன் வீடியோக்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில், ‘கூச முனுசாமி வீரப்பன்’ சீசன் 2 தொடரின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், மறைந்த நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் எப்படி கடத்தினார், கடத்தலுக்குப் பின் நடந்த சம்பவங்கள் என்னென்ன என்பது குறித்த வெளிவராத வீடியோ, புகைப்படங்கள் இருக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/koose-munisamy-veerappan-season-2-teaser-out




