சென்னை, கன்னட திரைப்படமான 'முகில்பேட்டை' மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை கயாடு லோஹர், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கிய 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்தடுத்த படங்களில் பிஸி 'டிராகன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான 'இதயம் முரளி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், அடுத்ததாக ஜி.வி. பிரகாஷுடன் 'இம்மார்டல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். "உடன்பாடு இல்லையென்றால் நேரடியாக கூறுவேன்" இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படப்பிடிப்பில் தனக்கான எல்லைகள் குறித்து கயாடு லோஹர் மனம் திறந்து பேசினார். "படப்பிடிப்பில் எனக்கு உடன்பாடு இல்லாத ஆடை அல்லது காட்சிகள் இருந்தால், அதை இயக்குநர் மற்றும் படக்குழுவினரிடம் வெளிப்படையாகக் கூறிவிடுவேன். எந்த விஷயத்திலும் தயங்காமல் பேசுவது மிகவும் அவசியம்," என்று தெரிவித்தார். "எல்லைகளை மதிக்க வேண்டும்" மேலும் அவர் கூறுகையில், "ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட எல்லைகள் இருக்கின்றன. அந்த எல்லைகளை அனைவரும் மதிக்க வேண்டும். திறந்த மனதுடன் பேசுவதுதான் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான பணிச்சூழலை உருவாக்கும். அதனால், நம்முடைய எல்லைகளில் உறுதியாக இருப்பதும், நம்முடைய கவலைகளை வெளிப்படையாக தெரிவிப்பதும் மிகவும் முக்கியமானது," என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-wont-act-in-scenes-im-not-comfortable-with-gayathri-lohar-speaks-candidly




