சென்னை, நாடு முழுவதும் கிருஷ்ண ஜெய்ந்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அநீதியை ஒழிப்பதற்காகவும், நீதியை நிலை நிறுத்துவதற்காகவும் கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதாரம் எடுத்த நாளான கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ண ஜெயந்தி திருநாள் அநீதி எங்கு தலைதூக்கினாலும் அதை அழிக்க கிருஷ்ண பகவான் அவதாரம் எடுப்பார் என்பார்கள். இப்போது தமிழ்நாட்டில் எங்கு அநீதி நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக போராட நாமும் கிருஷ்ண பகவானாக உருவெடுக்க வேண்டும். அது தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைதி, வளம், மகிழ்ச்சி, சகோதரத்துவம், அன்பு, அறம் உள்ளிட்ட அனைத்தும் செழிக்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை கிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanti-greetings-from-anbumani-ramdas




