சென்னை, பாஜக சொல்வது 'அலுவல்'. நாடறியும் அமித் ஷாவின் 'நழுவல்' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பதில் சொல்லப் பயந்தவர். இது 'அலுவல் பயணம்' என்றால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஓடி ஒளிந்தாரே உள்துறை அமைச்சர் அமித் ஷா, அது என்ன 'அரசுப்பணி' இல்லையா? நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான வன்முறை, மற்றும் தொகுதி மறுவரையறை என எதற்குமே அவையில் நின்று நேருக்கு நேர் பதில் சொல்லப் பயந்தவர்.அட, அவரு தான் நாடாளுமன்றத்துக்கே வரதே இல்லையே! 'நழுவல்' வேலைதானே இது! அண்ணே,நாடாளுமன்றத்தில் அவர் கொண்டு வரும் மசோதாக்களின் போதே அந்தப் பக்கம் வராமல் எஸ்கேப் ஆனாரே, அப்ப அது 'அலுவல் பணி'னு தெரியலையா? அதைத்தான் நாங்களும் கேட்கிறோம். பாஜக அரசின் தோல்விகளை மறைக்க வழக்கம்போல அமித் ஷா செய்யும் 'நழுவல்' வேலைதானே இது! நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்கத் தெரியாத பாஜகவினர் எங்களுக்கு 'அலுவல்' பாடம் எடுப்பது, வடிவேலு சொல்ற மாதிரி சின்னப் புள்ளத்தனமா இருக்கு! அண்ணா அப்புறம். "காங்கிரஸை மக்கள் வெறுக்கிறார்கள்"னு அரசியல் நாகரிகம் பேசுறீங்களே. கொஞ்ச நாள் முன்னாடி, அப்புறம் கொஞ்ச மாசம் முன்னாடினு பெண்களை இழிவா பேசின லிஸ்ட் போயிட்டே இருக்கு. இப்படிப் பெண்களைத் தரக்குறைவா பேசுறீங்களே, அதுதான் அருவருக்கத்தக்க அரசியல்! அந்தப் பேச்சுகளைத் தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் வெறுக்கிறாங்க! "வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bjp-calls-it-official-business-but-the-nation-knows-it-as-amit-shahs-evasion-manickam-tagore




