சூடான ஸ்வீட் கார்ன்: ஒரு கப் வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்களுடன் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலா மற்றும் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம். மாலை நேரத்திற்கு இது சுவையான சிற்றுண்டியாக இருக்கும். வறுத்த கொண்டைக்கடலை: எண்ணெய் சேர்க்காமல் வறுத்த கொண்டைக்கடலையுடன் சிறிதளவு உப்பு, எலுமிச்சைச் சாறு மற்றும் சாட் மசாலா சேர்த்து சாப்பிடலாம். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து கிடைக்கிறது. பழக்கலவை: உங்களுக்கு பிடித்த ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களைச் சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம். வறுத்த கொள்ளு: உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் கொள்ளுப் பயறை சுத்தம் செய்து, எண்ணெய் சேர்க்காமல் வாணலியில் நன்றாக வறுத்து சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம். வேகவைத்த சுண்டல்: கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயறை வேகவைத்து, அதனுடன் தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம். இது வயிறு நிறைவாக இருப்பதற்கு உதவும். சூடான வேகவைத்த காய்கறிகள்: கேரட், சோளம், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளை வேகவைத்து, மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து சாப்பிடலாம். மக்கானா: மக்கானாவை எண்ணெய் அல்லது நெய் அதிகம் சேர்க்காமல் லேசாக வறுத்து, சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம். மாலை நேரத்தில் வறுவல் வகைகளுக்கு மாற்றாக இதை எடுத்துக்கொள்ளலாம். பஜ்ஜி, போண்டாவுக்கு மாற்று: மழைக்காலத்தில் எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, போண்டா போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதற்குப் பதிலாக, வேகவைத்த பயறுகள், பழங்கள், வறுத்த கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்வு செய்வது நல்லது. அளவோடு சாப்பிடுவதும், அதிக உப்பு மற்றும் எண்ணெயைத் தவிர்ப்பதும் முக்கியம். ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிடலாம்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/healthy-snacks-for-rainy-season-7




