'பிரேமலு' பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியானப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 'பெத்லகேம் குடும்ப யூனிட்' பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தை பகத் பாசில் தனது பாவனா ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் நிவின் பாலி, மமிதா பைஜு கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில் இப்படம் நல்ல வசூல் சாதனையையும் படைத்திருக்கிறது. "இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம்" - விஜய்யைச் சாடிய சீமான் இந்நிலையில் இப்படத்தின் வெற்றி குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான பகத் பாசில் பேசியிருக்கிறார். " புதுமையானக் கதையை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்பதற்கு 'பெத்லகேம் குடும்ப யூனிட்' வெற்றியே மிகப்பெரிய சான்று. பகத் பாசில் நேர்மையான திரைக்கதை, வயது வித்தியாசக் காதல், நகைச்சுவை, படமாக்கப்பட்ட விதம் என எல்லாமே நன்றாக அமைந்திருக்கின்றன. அதோடு, ஓணம் விடுமுறைக்காலத்தில் எங்களுக்கு ஒரு சரியான வெளியீட்டுத் தேதியும் அமைந்தது. இயக்குநர் கிரிஷ், நடிகர் நிவின்பாலி உள்ளிட்ட படக்குழுவினரையே இந்த வெற்றி சேரும்" என்று தெரிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/mollywood/fahadh-faasil-about-bethlehem-kudumba-unit-success




