சென்னை, நான்கு புதுமுக நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கோல்ட் கால்' என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. விரைவில் வெளியாகும் ‘கோல்ட் கால்’ தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. வித்தியாசமான கதைக்களங்களில் கதையைச் சொல்லி பார்வையாளர்களை அசத்தும் புதுமுக கலைஞர்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்றிருக்கிறது. அந்த வகையில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன் ஆகிய நான்கு புதுமுக நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கோல்ட் கால்' என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. தம்பிதுரை இயக்கிய படம் இந்தப் படத்தில் அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே. கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.என்.சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். தம்பிதுரை இயக்கியுள்ள இப்படத்தை வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார். ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார். ரசிகர்களை ஈர்க்கும் படம் தம்பிதுரை கூறுகையில், "இந்த சமூகத்தில் விற்பனை பிரதிநிதிகள் என்பவர்களும் உண்டு. இவர்களின் வாழ்வியலில் நடைபெறும் சம்பவங்களை நகைச்சுவையுடன் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறோம். இது ரசிகர்களை ஈர்க்கும்". என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/interesting-incidents-in-the-lives-of-sales-representatives-cold-call




