மும்பை, பாலிவுட் திரையுலகின் முன்னணி பின்னணி பாடகர்களில் ஒருவர் சோனு நிகாம். நரம்பு அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு, மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பொதுவாக ஆபரேஷன் தியேட்டர் என்றாலே பதற்றமும் பயமும் தொற்றிக்கொள்ளும். ஆனால், பாடகர் சோனு நிகாம் தனக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே, பாட்டுப் பாடி டாக்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பாடலால் உருகிய அரங்கம் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் நிதேஷ் சத்பாய் மற்றும் மருத்துவக்குழுவினரை உற்சாகப்படுத்த, பழம்பெரும் பாடகர் முகமது ரபியின் புகழ்பெற்ற பாடலான "சுகானி ராத் தல் சுக்கி" என்ற பாடலை சோனு நிகாம் பாடினார். அவர் ராகம் தப்பாமல் பாடிய விதம் அங்கிருந்த மருத்துவக்குழுவினரை நெகிழ செய்தது. வைரல் பதிவு இந்த நெகிழ்ச்சியான வீடியோவை சோனு நிகாம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மருத்துவக்குழுவினருக்காக ஆபரேஷன் தியேட்டரில் பாடினேன். வலியிலும் நிற்காத பாடல். இதுவே இசையின் இன்பம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தனக்கு ஆபரேஷன் நடக்கும்போதே, பாட்டுப் பாடிய பாலிவுட் பாடகர் சோனு நிகாமின் வீடியோ வைரலாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/bollywood-singer-sings-during-surgery-stuns-doctor




