செவன் ஹில்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் ஷங்கர் கே.என். மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரித்து வரும் புதிய திரைப்படம் 'பீட்சா பாய்ஸ்'. இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கேஷவ் சிர்ரின் இயக்கியுள்ளதுடன், படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார். சிவம் சங்கர் கதாநாயகனாகவும், நேகா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படம், பீட்சா உணவகத்தில் பணிபுரியும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. புதிய பீட்சா ஐடியாவை உருவாக்கி அதில் வெற்றி பெற அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதற்காக சந்திக்கும் சவால்களும் படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளன. முழுமையான கமர்ஷியல் படம் காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. டைட்டில் புரோமோ வெளியீடு இந்த நிலையில், 'பீட்சா பாய்ஸ்' திரைப்படத்தின் டைட்டில் புரோமோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இளைஞர்களின் உற்சாகத்தையும், கனவுகளையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டைட்டில் புரோமோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/title-promo-of-the-movie-pizza-boys-released




