சென்னை, தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலக அளவில் 3,500 திரைகளுக்கு மேல் வெளியாக உள்ளது. இந்த படத்தை திரையில் கொண்டாடுவதற்காக விஜய் ரசிகர்களும், த.வெ.க. கொண்டர்களும் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் ‘ஜனநாயகன்’ படத்தின் சிறப்பு காட்சியை இன்று பார்வையிட்டார். சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திரையரங்கில் ‘ஜனநாயகன்’ முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jananayagan-releases-tomorrow-chief-minister-vijay-watched-a-special-screening




