சென்னை, எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கம் தரவில்லை எனக்கூறி சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”மாணவர் கொலை, பாலியல் வன்கொடுமை தொடர்பான கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. மாணவர்கள் கொலை மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளிக்காமல் எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். எல்லாவற்றுக்கும் திமுக மீது குறை சொல்கின்றனர். எந்த துறைக்கு யார் அமைச்சர்கள் என்று தெரியவில்லை. அந்தந்த துறை அமைச்சர் அந்தந்த துறை கேள்விகளுக்கான பதிலை அளிக்கவில்லை. எந்த அமைச்சர்களும் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. சட்டம், ஒழுங்கிற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் இன்று சட்டசபைக்கு வரவில்லை.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-failed-to-answer-department-specific-questions-udhayanidhi-stalins-allegation




