சென்னை, தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 116 வயதுள்ள மூதாட்டி நவநீத அம்மாள் திருப்பதி மலைப்பாதையில் 9 கி.மீட்டர் தூரம் கொண்ட 3,550 படிக்கட்டுக்களை, தனது ஊன்றுகோலால் நடந்தே கடந்து சென்று, திருப்பதி ஏழுமலையானை தரிசித்த செய்தியறிந்து அளவிலா மகிழ்ச்சி அடைகிறேன். நெஞ்சார்ந்த நன்றி நூற்றாண்டை கடந்த நிலையிலும், தனது தள்ளாத வயதில், தனியாத பக்தியுடன் திருமலை நாதனை தரிசனம் செய்த நவநீத அம்மாவின் பாதம் தொட்டு வணங்கி, பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.நவநீத அம்மாவின் பக்தியை பாராட்டி, மெச்சி, மகிழ்ந்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், பணியிடங்களை நிரப்பவேண்டும் 'தமிழகத்திலுள்ள 188 அரசுக்கலை அறிவியல் மற்றும் பி.எட். கல்லூரிகளில் 105 பணியிடங்கள் காலியாக உள்ளன. பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பவேண்டும். மாலுமிகள் இல்லாத கப்பல்களாய் தவித்து நிற்கும் பல்கலைக்கழங்களை காப்பாற்ற வேண்டும்' என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-commends-a-116-year-old-woman-who-walked-up-the-tirupati-hill-path




