அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படம் ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றிருத்த நிலையில் ஓடிடி- யிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 'மொத ராத்திரி' திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் 'மொத ராத்திரி' படத்திற்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. விருதைப் பெற்ற பிறகு பேசிய இயக்குநர் ராஜ கருப்புசாமி, "இந்த மேடையில் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறேன். எனக்கு தெரிந்து என்னுடைய நண்பர்களே 10 கதைகள் வைத்திருக்கிறார்கள். எப்படியாவது நல்ல படம் பண்ண வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜா கருப்பசாமி என்னை விட நல்ல கதைகள் எல்லாம் வைத்திருக்கக் கூடிய முதல் பட வாய்ப்பு தேடும் உதவி இயக்குநர்களுக்கு ஏதாவது முடிந்தால் செய்யுங்கள்" என்று அங்கிருந்த தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். "ரஜினி சார் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க, ஆனா."- 'மொத ராத்திரி' நடிகர் ரிஷிகாந்த் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/kollywood/modha-rathiri-movie-director-about-debunant-directors




