நடிகை சவுகார் ஜானகிக்கு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சவுகார் ஜானகியின் வயது 94. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சவுகார் ஜானகி காலமானார் இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நடிகை சவுகார் ஜானகி காலமானார் 400-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்த சவுகார் ஜானகி 1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக 2022-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். கடந்த 1950ஆம் ஆண்டு, ‘சவுகார்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான சவுகார்ஜானகி, 70 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, 2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சவுகார் ஜானகிக்கு 400-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/veteran-actress-sowcar-janaki-passes-away




