நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் பெற்றோர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவு. அதே போல் சுர்ஜித்தின் உறவினரான ஜெயபால் மீதான குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது. கவின் ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரித்து நெல்லை 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (வன்கொடுமை தடுப்பு வழக்குகள்) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தார். கவின் இந்நிலையில் நீதிபதி விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், "சரவணன், அவர் மனைவி கிருஷ்ணகுமாரி ஆகியோர் கொலைக்குப் பிறகு அவரது மகனைச் சந்தித்து ஆதாரங்களை அழிக்குமாறு கூறியதற்கு எந்த ஆதரமும் இல்லை. நேரில் கண்ட சாட்சிகளும் இல்லை. முதல் குற்றவாளி, மனுதாரர் மற்றும் மூன்றாம் குற்றவாளி ஆகியோருக்குச் சொந்தமான கைபேசிகள் சம்பவம் நடைபெற்ற போது ஒரே அலைபேசி கோபுரத்துடன் இணைக்கப்பட்டிருந்தன என்ற அடிப்படையில் சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இரு நபர்கள் ஒருவருக்கொருவர் உடனிருந்தனர் என்பதை செல் கோபுர இருப்பிடத் தகவல்கள் உறுதியாக நிறுவ முடியாது. மனுதாரர்கள் தொலைபேசியில் தன் மகளைத் தான் எச்சரித்துள்ளனர். சரவணன் இறந்தவருடன் பேசியதாக போலீஸார் சுட்டிக்காட்டும் தொலைபேசி உரையாடல் சம்பவ நாளிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. இவ்விரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவது புலனாய்வு அமைப்பின் அனுமானம் மட்டுமே. சரவணன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய போதுமான ஆதாரம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர் மீது வன்கொடுமை வழக்கு பதிய முடியாது. கொலைச் செயலில் மனுதாரர்கள் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு இல்லை. சம்பவ இடத்தில் இருந்தாகவோ, குற்றச்சதி குறித்து அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்றோ குற்றம்சாட்டப்படவில்லை. நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து - உயர்நீதிமன்றம் அரசுத் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முரணாக உள்ளன. எனவே சாதி ரீதியான குறிப்பு ஏதுமில்லாதது, பொதுவெளியில் குற்றம் நிகழாதது மற்றும் அடிப்படையான குற்றச் செயலில் பங்கேற்பு இல்லாதது மேலும் காவல் உதவி ஆய்வாளர் சரவணன்தான் முதலில் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார் ஆகிய காரணங்களால் மனுதாரர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரியைப் பொறுத்தவரை அவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. கவின் ஜெயபால் வழக்கைப் பொறுத்தவரை இறந்த கவினை ஏற்கெனவே அவர் நேரில் சந்தித்து காதலைக் கைவிடாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்ததாகவும், அவருடன் 24 நிமிடங்களுக்கு மேல் போனில் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை பிற சாட்சிகளும் தெரிவித்துள்ளனர். கொலைக்குப் பிறகு சுர்ஜித்தின் ஆடைகளை அழித்தல், வாகன எண் பலகையை அகற்றுதல் மற்றும் அலைபேசியைச் சேதப்படுத்துதல் ஆகிய செயல்கள் மனுதாரருக்குச் சொந்தமான குவாரியில் நடைபெற்றுள்ளது. அந்தப்பொருட்கள் குவாரியில் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளன. இதிலிருந்து மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பது தெரிகிறது. எனவே மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்றார். கவின் ஆணவக்கொலை: சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து; "மேல்முறையீடு செய்க" - திருமா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/documents-provided-by-government-contradict-charges-what-judge-said-in-kavin-honor-killing-case




