பர்மிங்காம், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காமில் நடந்த தொடக்க ஆட்டத் தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடை யிலான 2-வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ரோகித் சர்மா, கில் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். கில் 31 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ரோகித் சர்மா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இஷான் 1 ரன், வாஷிங்டன் சுந்தர் 2 ரன், அக்சர் படேல் 1 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர். விராட் கோலி 65 ரன்களுக்கும், ஷ்ரேயாஸ் அய்யர் 66 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.இதனால் 44 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர், அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/kohli-shreyas-hit-half-centuries-india-sets-england-a-target-of-234-runs




