துஷ்யந்த், ஜனனி நடிக்கும் ‘ஆல் பாஸ்’ படம் வரும் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மைதீன் இயக்கத்தில் ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா ஆர் தயாரித்துள்ள படம் ‘ஆல் பாஸ்’. படத்தில் துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக்பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா.ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர். வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்‘ஆல் பாஸ்’. சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, ரோஷன் பஷீர், அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள். தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். பாடல்களை மோகன் ராஜன், நிலவை பார்த்திபன், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர். படம் பற்றி இயக்குநர் மைதீன் “வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம். வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கி இருக்கிறோம். படத்தை வருகிற 9-ந் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/all-pass-film-new-release-date-announced



