தென்காசி, தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த மழையினால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை முற்றிலும் மூழ்கும் வண்ணம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. அனுமதி இன்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் தண்ணீர் சீராக விழுகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மீண்டும் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் குவிந்தனர். குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. பாதுகாப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-allowed-to-bathe-at-all-waterfalls-in-courtallam




