‘சிக்மா’ திரைப்படத்தில் ஏராளமான பொழுதுபோக்கு, நிறைய சாகசங்கள் மற்றும் ஜென்ஸி தலைமுறைக்கான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்று இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார். முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பரியா அப்துல்லா ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா ஒரு துள்ளலான பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார். இப்படம் ஒரு ஆக்ஷன்-அட்வென்ச்சர் காமெடி படமாகும். இப்படத்தின் டிரெய்லரை இயக்குனர் ராஜமவுலிக்கு படக்குழுவினர் திரையிட்டுக் காட்டினர். டிரெய்லரைப் பார்த்த பிறகு அவர் “இந்த படத்தைப் பார்த்தவுடன் எனக்கு கிடைத்த முதல் எண்ணம் என்னவென்றால், இது ஒரு ஜாலியான பயணம் என்பதே. இதில் ஏராளமான பொழுதுபோக்கு, நிறைய சாகசங்கள் மற்றும் ஜென்ஸி தலைமுறைக்கான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. இது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. ‘சிக்மா’ படம் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தவறவிடாதீர்கள். இதில் பல குறிப்பிடத்தக்க நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த ஜாலியான சாகசத்தை உங்களிடம் கொண்டு சேர்க்க அவர்கள் அனைவரும் சிறப்பான பணியைச் செய்துள்ளனர்” என்று ராஜமவுலி கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jason-sanjays-sigma-trailer-is-a-fun-journey-director-rajamouli




