திருச்சி, பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், திருச்சி சமயபுரத்தில் இன்று நடைபெறுகிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. மேலிடப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், தேர்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்தும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனை மாவட்ட வாரியாக கட்சிப் பணிகளின் நிலை, அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-consultative-meeting-in-samayapuram-trichy-today




