நம் நாட்டிலும், வெளிநாடுகளில் பல்வேறு இடங்களிலும் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான். அமெரிக்காவின் நியூஜெர்சியில் 183 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அக்ஷர்தாம் கோவில். உலகில் பெரும் பரப்பளவில் கட்டப் பட்ட கோவில்களில் ஒன்று இது. 12 ஆண்டுகள் கட்டுமான பணி இந்தக் கோவிலின் கட்டுமானப் பணி, 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்றிருக்கிறது. 255 அடி அகலம், 345 அடி நீளம் கொண்டதாகவும். 191 அடி உயரம் கொண்டதாகவும் இக்கோவில் அமைந்திருக்கிறது. இதன் கட்டுமானத்தில் 20 லட்சம் கன அடி கல் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். ஆலயத்துக்குள் ஒரு பிரமாண்ட குளம் மற்றும் மிகப்பெரிய படிக்கிணறு, சில நீர்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள புனித நதிகள் உள்பட உலகெங்கிலும் உள்ள 300-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு இங்கு சேர்க்கப்ப டுகிறது. இந்தக் கோவிலில் பரப்பிரம்ம மண்டபம், அக்ஷரபிரம்ம மண்டபம், முக்த மண்டபம் மற்றும் ஐஸ்வர்ய மண்டபம் என நான்கு முக்கிய மண்டபங்கள் உள்ளன. பரப்பிரம்ம மண்டபத்தில் சுவாமி நாராயணனுக்கான கருவறை அமைந்துள்ளது. அக்ஷரபிரம்ம மண்டபம், சுவாமி நாராயணனின் முதல் ஆன்மீக வாரிசான குணதீதானந்த சுவாமியைப் போற்றும் வகையில் அமைந்துள்ளது. இக்கோட்பாட்டைப் பின்பற்றியவர்களை கவுரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் உள்ள தூண்களில், இறைவனை வழிபடுவதிலும், அவ ருக்கு சேவை செய்வதிலும் ஈடுபட்டு முக்தி அடைந்தவர்களின் 48 பளிங்குக் கற்சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த நிலையில் கோவிலுக்கு முன்பாக இரு பக்கமும் செவ்வக வடிவில் குளம் அமைந்துள்ளது. இதிலும் வேதங்களைப் பிரதிபலிக்கும் நான்கு சிலைகள் உள்ளன. கோவி லைச் சுற்றிலும் சிவப்பு மணற்கல்லால் ஆன 2,485 அடி (757 மீட்டர்) நீளமுள்ள தூண் வரிசை, வலஞ்சுழிப் பாதையைப் போல் அமைந்துள்ளது. இதன் வடிவம் பார்ப்பதற்கு, ஒரு மலர் மாலையைப் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆலயத்தில் 13 சன்னிதிகள் இந்த ஆலயத்தில் 13 சன்னிதிகள் உள்ளன. மையச் சன்னிதியானது. சுவாமிநாராயண் மற்றும் குணதீதானந்த சுவாமி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து 'அக்ஷர புருஷோத்தம மகாராஜ்' என்று வழிபடப்படுகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/the-largest-temple-built-in-the-worlddo-you-know-where-it-is




