முழு கட்டுரை
காவிரி ஆற்றுக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், மாண்டியா மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆறு கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தைச் சேர்ந் விஜயம்மா (50), ஸ்வேதா (38), பிரியங்கா (28) மைத்ரா (20), மகேஷ் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 5 பேரும் மாண்டியா மாவட்டம் மலவல்லி தாலுகாவிலுள்ள முத்தத்தியில் உள்ள முத்தத்தி ராயா கோயிலுக்குச் சென்றனர். அங்கு வழிபட்ட பின்னர் அந்தப் பகுதியில் ஓடும் காவிரி ஆற்றைக் காண சென்றவர்கள். ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கி மொபைலில் விதவிதமாக வீடியோ, போட்டோ, செல்ஃபி எடுத்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அப்போது எதிர்பாராதவிதமாக ராஜம்மா ஆற்றில் ஆழத்தில் சிக்கிக் கொள்ள அவரைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற மற்ற 4 பேரும் ஆழமான பகுதிக்குச் சென்று தப்பிக்க முடியாமல் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதைப் பார்த்த அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள், உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி இறந்த ஐந்து பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மாண்டியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்தத்தியில் காவிரி ஆறு பாயும் பகுதி அதிக ஆழமான அபாயகரமான பகுதி என்பதால் யாரும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று அங்கு எச்சரிக்கை பலகை வைத்தும், ஆபத்தை உணராமல் செல்பி மோகத்தால் இதுபோன்ற துயரங்கள நிகழ்வதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ: கோச்சிங் சென்டரில் தீவிபத்து; 15 பேர் பலி; தப்பிக்க மாடியிலிருந்து குதித்த மாணவர்கள் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
விரைவாகப் படிப்பதற்கான தமிழ் சுருக்கம் இது. முழு செய்தி, கூடுதல் சூழல், புதுப்பிப்புகளுக்கு அசல் வெளியீட்டாளரின் தளத்தைத் திறக்கவும்.
முழுக் கட்டுரை — கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்



