‘கற்றது தமிழ்’, ’தங்கமீன்கள்’, ’பேரன்பு’, ’பறந்து போ’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``இயக்குநர் ராமின் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் இன்று அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது. மாரி செல்வராஜ் பொதுவாக சினிமா என்பது பலருக்கு ஒரு சாதாரண விஷயமாத் தோன்றலாம். ஆனால், அதை உருவாக்கும் படைப்பாளிக்குத்தான் அது எவ்வளவு பெரிய உணர்ச்சிப்பெருக்கு என்பது புரியும். இந்தப் படத்தை நான் ஐந்து ஆறு முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், இயக்குநர் இதை எப்படி யோசித்திருப்பார், எப்படி இதனுள் பயணித்திருப்பார், மனிதர்களோடும் சமூகத்தோடும் இந்த பேரிரைச்சலுக்குள் எப்படி இவ்வளவு ஆழமாக இறங்கியிருப்பார் உள்ளிட்ட கேள்விகளும் வியப்பும் தோன்றி உந்திக்கொண்டே இருக்கும். அந்த அளவிற்குச் சிந்திக்க வைத்த, வியப்பில் ஆழ்த்திய ஒரு படைப்புதான் 'ஏழு கடல் ஏழு மலை'. திரைப்படம் என்பது வெறும் கொண்டாட்டங்களையும் தாண்டி, ஒரு பேரமைதியையும் பேரிரைச்சலையும் கொடுக்கக்கூடியது. பல கேள்விகளுக்குப் பதிலளிப்பது. இவையனைத்தையும் உள்ளடக்கிய படமாகவே 'ஏழு கடல் ஏழு மலை' உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பெரிய திரையில் (திரையரங்கில்) பார்க்கும்போது, அதில் உள்ள காட்சிகளோடும் மனிதர்களோடும், இயக்குநர் உருவாக்கியுள்ள அந்த அருமையான கற்பனை உலகத்திற்குள் நீங்களும் பயணித்து, ஒரு மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுவீர்கள் என்பது உறுதி. மாரி செல்வராஜ் நான் இப்போது வகாஸமத்தில் 'மஞ்சனத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால், என்னால் திரையரங்கிற்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை. ஆனால், நீங்கள் திரையரங்கிற்குச் சென்றால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சிறப்பான அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. எனவே, இந்த அரிய அனுபவத்தைத் தவறவிடாமல் அனைவரும் திரையரங்கிற்குச் சென்று 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தைப் பாருங்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள. உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன். ஏழு கடல் ஏழு மலை: `அப்பா, வழிகாட்டி. நிறைய கோணங்களில் ராம் சாரைப் பார்த்திருக்கிறேன்!'- அஞ்சலி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/kollywood/director-mari-selvaraj-about-ezhu-kadal-ezhu-malai-movie


