வேலூரில், அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் ஆட்சியில், எல்லாத் துறைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் பகுதிகளில் சுழன்று பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை நடத்துவதற்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறார். `மக்களுடைய வரிப்பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட இந்த அரசின் சார்பாகச் சிந்தாமல், சிதறாமல் பணிகள் நடைபெறும்’ என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அமைச்சர் செங்கோட்டையன் ஜாதி, மத பாகுபாடின்றி எல்லோரும் சமம். அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். முதலமைச்சர் விஜய் தொலைநோக்கு சிந்தனையோடு நலத் திட்டங்களை உருவாக்கி வருகிறார். வரலாறு படைக்கிற தலைவராக, இந்தியாவிற்கே ஒரு வழிகாட்டியாகத் திகழும் தலைவராக விஜய் விளங்கி வருகிறார். இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டியிடுவதால் எங்களுக்குப் பின்னடை வராது. ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்தக் கொள்கையின் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்கிறார்கள். அதனால், எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை’’ என்றார். "பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/cm-vijay-stands-as-a-guiding-light-for-all-of-india-tvk-minister-sengottaiyan-statement




