சேலம், சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசிய வழக்கில் திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை கைது செய்ய சேலம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆபாச பதிவு சேலம் குகை லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் வக்கீல் அஜித். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்களை சீரழிக்கும் வகையில் ஆபாசமான உடை அணிந்து கொண்டு பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பெண்கள் சிலர் ஈடுபடுகின்றனர். குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அதன்பேரில், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார், திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சாதனா உள்ளிட்ட சிலர் பல்வேறு ஐ.டி.க்கள் மூலமாக ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வந்தது தெரியவந்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி இதனிடையே, இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி சாதனா தரப்பில் முன்ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நீதிபதி சொர்ணம் நடராஜன், திருச்சி சாதனாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் சமூக வலைதள நிறுவனங்களுக்கு சைபர் கிரைம் போலீசார் ஒரு புகார் மனுவை அனுப்பியுள்ளனர். கைது செய்ய தீவிரம் மேலும், திருச்சி சாதனாவை கண்டுபிடித்து அவரை கைது செய்யவும் தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல், முதற்கட் டமாக திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தான் செய்தது தவறு என்பதை உணராமல் யூடியூப் சேனலை முடக்கியது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவரை கைது செய்ய சேலம் சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-over-obscene-remarks-on-social-media-trichy-sadhanas-youtube-channel-suspended




