நெல்லை, எந்த துண்டிற்கும் நான் பயந்தவன் அல்ல என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார். நெல்லையில் சட்டபேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- எந்த துண்டிற்கும், எந்த சீட்டுக்கும் நான் அடிபணிய மாட்டேன். எனக்கு இருக்கும் சந்தேகங்களை என்னுடைய துறை சார்ந்த சட்டப்பேரவை அலுவலர்களிடம் இருந்து சில குறிப்புகளை கேட்டு வாங்குவேன். சர்க்காரியா கமிஷன் எந்த ஆண்டில் சட்டப்பேரவை பேசப்பட்டது என்பது குறித்த குறிப்புகளை எடுத்து தாருங்கள் என்று கூறினேன். ஏனென்றால், விவாதத்திற்கு உடனடியாக தயாராக வேண்டும் என்பதால் அவைக்குறிப்பில், அவை இருப்பது எனக்கு தெரிந்தும், அவற்றின் தேதிகளை பற்றி கேட்டேன். அதைப்பற்றிய துண்டுச்சீட்டைத்தான் கொடுத்தார்கள். ராஜினாமா கடிதங்கள் பரிசீலணை சபையை எப்படி நடத்தவேண்டும் என்றும் யாரை பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், எனக்கு நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட நேரமும், ஒதுக்கப்பட்ட நேரமும் அவர்களுக்கு போதும் என்று நான் எண்ணுகிறேன். மேலும், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான ராஜினாமா கடிதங்கள் பரிசீலணையில் உள்ளன. இவ்வாறு அவர் பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-not-bow-to-any-pressure-speaker-jct-prabhakar




