மோகி, ஜூனியர் ஆசியக் கோப்பை ஆக்கி தொடரில் 4-வது முறையாக இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மலேசியாவை வீழ்த்தி ஜூனியர் ஆசியக் கோப்பை ஆக்கிப் போட்டி சீனாவின் மோகி நகரில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் அபாரமாக ஆடிய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஹீரோ இந்திய அணியில் கேப்டன் அன்மோல் எக்கா, பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி 2 கோல்கள் (16-வது, 54-வது நிமிடம்) அடித்தார். சுக்விந்தர் ஒரு கோல் (51-வது நிமிடம்) அடித்தார். மலேசிய அணியில் ராகுல் (60-வது நிமிடம்) ஒரு கோல் போட்டார். இந்திய கோல் கீப்பர் விவேக் லக்ரா, எதிரணியின் பெனால்டி ஸ்டிரோக் உள்பட பல கோல் வாய்ப்புகளை முறியடித்து ஹீரோவாக ஜொலித்தார். இறுதிப்போட்டி மற்றொரு அரையிறுதியில் தென்கொரியா 4-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/hockey/junior-asia-cup-hockey-india-advances-to-the-final-for-the-fourth-time




