முழு கட்டுரை
காலை கண் விழித்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நாம் அடிக்கடி பயன்படுத்தும் மிக முக்கியமான ஒரே செயலி வாட்ஸ்அப் மட்டும்தான். அப்படிப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனத்தின் உலகளாவிய புதிய தலைவராக (சிஇஒ), இந்தியாவைச் சேர்ந்த க்ரெட் (CRED) நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏழு வருடங்களாக வாட்ஸ்அப்பை வழிநடத்தி வந்த வில் கேத்கார்ட், மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து குணால் ஷாவுக்கு இந்த மாபெரும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உலகமே பயன்படுத்தும் ஒரு பெரிய சோஷியல் மீடியா தளத்திற்கு இந்தியர் ஒருவர் தலைவராகியிருப்பது, ஒட்டுமொத்த உலக தொழில்நுட்ப வட்டாரத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குணால் ஷா இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் ஒரு பிரமாண்டமான பிசினஸ் டீலும் நடந்துள்ளது. மெட்டா நிறுவனம் சுமார் 900 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹8,550 கோடி) பணத்தை க்ரெட் நிறுவனத்தில் முதலீடு செய்து, அதன் 20 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதனால் க்ரெட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு ₹43,239 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த டீலின் படியே, குணால் ஷா க்ரெட் நிறுவனத்தின் தினசரி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விலகி, வாட்ஸ்அப் நிறுவனத்தை உலகளவில் வழிநடத்தப் போகிறார். குணால் ஷா வாட்ஸ்அப் தலைவராகப் பொறுப்பேற்றதால், க்ரெட் நிறுவனத்தை நடத்த புதிய தற்காலிக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 2020 முதல் க்ரெட்டின் முக்கிய பொறுப்பில் இருந்த மிதென் சம்பத் என்பவர் தற்காலிக சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். வாட்ஸ் அப் 2018-ல் தொடங்கப்பட்ட க்ரெட் நிறுவனம், கிரெடிட் கார்டு பில் கட்டுபவர்களுக்குச் சலுகைகளை வழங்கும் தளமாக ஆரம்பித்து, இன்று இந்தியாவின் 40 சதவீத கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைக் கையாளும் ஒரு லாபகரமான மாபெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. மெட்டா நிறுவனம் குணால் ஷாவைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் ஒரு முக்கியமான பிசினஸ் பிளான் இருக்கிறது. வாட்ஸ்அப் தளத்தில் விளம்பரங்கள், புதிய பிரீமியம் வசதிகளைக் கொண்டு வந்து அதன் மூலம் வருமானத்தைப் பெருக்குவதே மெட்டாவின் அடுத்த இலக்கு. இந்தியாவில் பணப் பரிவர்த்தனை மற்றும் பிசினஸ் துறையில் குணால் ஷாவுக்கு இருக்கும் அசாத்திய அனுபவம், வாட்ஸ்அப் செயலியை இன்னும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்று மெட்டா நிறுவனம் முழுமையாக நம்புகிறது. Whatsapp-க்கு செக்?! 'டிராக்கிங் இல்லை, விளம்பரம் இல்லை' - எலான் மஸ்கின் XChat; அப்படி என்ன ஸ்பெஷல்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
விரைவாகப் படிப்பதற்கான தமிழ் சுருக்கம் இது. முழு செய்தி, கூடுதல் சூழல், புதுப்பிப்புகளுக்கு அசல் வெளியீட்டாளரின் தளத்தைத் திறக்கவும்.
முழுக் கட்டுரை — கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்




