எர்ணாகுளம், எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுப்புழா அருகே மாரடி பகுதியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி இவாணியா (வயது 10) என்பவள், கேரளம் முதல்-மந்திரி வி.டி.சதீசனுக்கு கடிதம் எழுதி உள்ளாள். அதில், மாரடி ஊராட்சிக்கு உட்பட்ட அவராச்சன் குடியிருப்பு பகுதியில் புதிய கள்ளு கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கள்ளு கடை பள்ளி முடிந்து மாலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விளையாடும் பகுதியில், கள்ளு கடை திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால், மாணவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டோம். அப்போது போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த நாங்கள் பயந்து போனோம். எனவே, அப்பகுதியில் புதிய கள்ளு கடை அமைக்கக்கூடாது. அதனை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/opposition-to-opening-of-new-toddy-shop-letter-from-5th-grade-student-to-chief-minister-vd-satheesan




