சென்னை, சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி எழில்நகர் பகுதியில் பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுங்கையூர் எழில்நகர் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாடை கட்டி அதில் ஒருவர் பிணம்போல் படுத்திருக்க, அங்கிருந்த பெண்கள் ஒப்பாரி வைத்தும், கையில் பதாகைகளை ஏந்தியும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரிப்பன் மாளிகை முற்றுகை போராட்டம் ஆர்ப்பாட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் கூறும்போது. "சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில், வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுவதால் சுற்று வட்டார மக்கள் துர்நாற்றம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே குப்பை கிடங்கை அகற்றாவிட்டால் சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/women-protest-by-holding-a-procession-demanding-removal-of-kodungaiyur-garbage-dum




