சென்னை தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நிதித்துறை செயலாளர் சித்திக் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டின் நிதி நிலைமை இக்கட்டான சூழலில் உள்ளது. வரவுகளை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள. பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளதால், மேலும் விலையேற்றும் திட்டம் இல்லை. கடந்த முறை ரூ.10 லட்சம் கோடியாக அரசின் கடன் சுமை இருந்தது. மாநில அரசின் கடன் சுமை கடந்த முறை 3.4% இருந்தது. இந்த ஆண்டு கடனை அதிகமாக உயர்த்தாததால் 3.17%ஆக குறையும். வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் கடன் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குறைக்க முடியாது. தமிழக அரசின் கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்லும். மத்திய அரசின் அனுமதியோடு தான் கடன் வாங்குகிறோம்” என்றார். கடன் அளவு எவ்வளவு? பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மரியவில்சன் கடன் அளவு பற்றிய தகவலை வெளியிட்டார். அதில் கூறிய்தாவது; மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் பொறுப்புகள், 2026-27-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 99 ஆயிரத்து 458 கோடியுடன் ஒப்பிடுகையில், 2026-27-ம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.10 லட்சத்து 98 ஆயிரத்து 768 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலுவைப் பொறுப்புகளில் மாநிலத்தின் பொதுக் கடன் மற்றும் பொதுக் கணக்குப் பொறுப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன. நிலைப் பெறுப்புகள் மேலும், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்காக பெறப்பட்ட ரூ.9,523 கோடியும் இந்நிலுவைப் பொறுப்புகளில் அடங்கியுள்ளது. இத்திட்டம், மத்திய அரசுத் துறைத் திட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் கணக்குகளில் உரிய கணக்கு சரிகட்டல்கள் மேற்கொள்ளப்படும்போது, நிலைப் பெறுப்புகள் 9,523 கோடி ரூபாய் குறையும். வரவு-செலவுத் திட்டம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி.) நிலுவைப் பொறுப்புகளின் விகிதம், 2026-27-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருந்த 27.03 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 2026-27-,ம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 27.01 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுக்கடனை பொறுத்த அளவில் 2026-27-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடியை திருப்பி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்த நிகர பொதுக்கடன், ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 653 கோடியாகவும், திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அது ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 964 கோடியாகவும் உள்ளது” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/debt-cannot-be-reduced-for-50-years-finance-secretary-siddique-explains




