வேலூர், கிட்டப்பர்களாக இருந்தவர்கள் எட்டப்பர்களாக மாறி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என தி.மு.க. மற்றும் காங்கிரஸ் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “தொகுதி மறுவரையறை காரணமாக தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராது, தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியாக சொன்ன பிறகும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். இன்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பிரிந்துவிட்டார்கள். கிட்டப்பர்களாக இருந்தவர்கள் எட்டப்பர்களாக மாறி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினை நமக்கு தேவையில்லை. தமிழக மக்கள் பயன்பெற வேண்டும் என்பதுதான் நமது ஆசை.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-were-once-kittappars-have-turned-into-ettappars-tamilisai-soundararajan-criticizes-the-congress-and-dmk




