சென்னை, மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பசுமைப் புரட்சியின் தந்தை இந்தியாவின் தலைசிறந்த வேளாண் அறிவியலாளரும், ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எனப் போற்றப்படும் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் பிறந்த நாளில் மரியாதைமிகு நினைவஞ்சலியை செலுத்துகிறேன். எம்.எஸ். சுவாமிநாதன் பிறந்த நாள் 1960-களில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், சக அறிவியலாளர்களுடன் இணைந்து முன்னெடுத்த ஆய்வுகள் மற்றும் வேளாண் கொள்கைகள் மூலம் நாட்டை தன்னிறைவு நோக்கி வழிநடத்தியவர் அவர். விவசாயிகளின் முன்னேற்றம், நிலையான வேளாண் வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் மகத்தான சேவையை, அவரது பிறந்த நாளில் நன்றியுடன் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/ms-swaminathan-led-the-country-towards-self-sufficiency-l-murugan-praises




